பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அதிபர் ஜின்பிங்கை சந்திக்க சீனா செல்கிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளது குறித்து...

அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜின்பிங்

Published On :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஏப்ரல் மாதம் பெய்ஜிங் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிகழாண்டில் (2026) சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், கடந்த பிப்.4 அன்று சீன அதிபர் ஜின்பிங்குடன் செல்போன் வாயிலாக அதிபர் டிரம்ப் உரையாடினார். அந்த உரையாடலின்போது, சீனா வருமாறு அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். இதனால், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கனிமவளங்களின் மீது அந்நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இத்துடன், கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் சீனா உடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக பெய்ஜிங் சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

US President Donald Trump is reportedly planning to visit China in April.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.