எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

புற்றுநோய் வருவதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் ரத்தப் பரிசோதனை!

புற்றுநோய் வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அதனைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை பற்றி..

News image

புற்றுநோய்

Updated On :11 பிப்ரவரி 2026, 5:26 pm IST

அமெரிக்காவில் 70 சதவிகித தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு ஹியூமன் பாபிலோமாவைரஸ் எனப்படும் எச்பிவி வைரஸ், காரணமாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் இது அதிகரித்து வரும் நிலையில், கருப்பை வாய் புற்றுநோய் போல இதனை முன்கூட்டியே கண்டறியும் வழிமுறைகள் இல்லை. இதனால், தலை மற்றும் கழுத்தில் கட்டிகள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்த பிறகே கண்டறிய முடிகிறது.

ஆனால், நாவல் லிக்விட் பயாப்சி டூல் மற்றும் எச்பிவி - டீப்சீக் போன்றவற்றின் மூலம், கழுத்து மற்றும் தலை புற்றுநோய் வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்று மருத்துவ இதழில் வெளியாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் கட்டிகளால் இரத்த ஓட்டத்தில் வெளியேற்றப்படும் HPV DNAவின் நுண்ணிய துகள்களைக் கண்டறிய HPV-DeepSeek எனப்படும் முறை, முழு-மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. இந்தக் குழுவின் ஆய்வுகள், ஏற்கனவே உள்ள நோயறிதல் முறைகளை விட மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு 56 ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து, அதில் 28 பேருக்கு கழுத்து மற்றும் தலை புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து அதனை முன்கூட்டியே தடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 22 பேருக்கு புற்றுநோய் கட்டிகளின் துகள்கள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, மக்கள் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் முன்கூட்டியே கழுத்து மற்றும் தலை புற்றுநோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.