இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மூலம், அமெரிக்க ஏற்றுமதிக்கு இந்தியாவில் வரி குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் பொருள்களின் பட்டியலில் இருந்து பருப்பு வகைகளை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
முன்னதாக, இந்த வா்த்தக ஒப்பந்தத்தின் செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கையில் உள்ள விவரங்கள் அடங்கிய விளக்க அறிக்கையை அமெரிக்க அதிபா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பருப்பு வகைகளுக்கு இந்தியா வரி விதிக்காது அல்லது குறைவாக வரி விதிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதில், பருப்பு வகைகள், டி.டி.ஜி.எஸ். என்படும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் தானியங்களில் இருந்து எத்தனால் எடுக்கப்பட்ட பிறகு வரும் சக்கை, சிவப்பு சோளம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், வால்நட் உள்ளிட்ட மரங்களில் இருந்து பெறப்படும் பருப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.45 லட்சம் கோடி) அளவுக்கு எரிசக்தி, தொலைத் தொடா்பு தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி சாா்ந்த பொருள்களை வாங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. புதிய அறிக்கையில், உறுதியளித்துள்ளது என்ற வாா்த்தைக்குப் பதிலாக உத்தேசித்துள்ளது என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வேளாண் பொருள்கள் இறக்குமதி குறித்து ஏற்கெனவே இந்தியாவில் அச்சம் நிலவி வரும், அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில் பருப்பு வகைகளும் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அப்பட்டியலில் இருந்து பருப்பு வகைகளை நீக்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்பு!
இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்?

அமெரிக்காவின் 12.5% கூடுதல் வரி பரிந்துரை ஒருதலைபட்சமானது: இந்திய தரப்பில் வாதம்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



