இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். இதன்மூலம் இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வது மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் அவா் கூறினாா்.
அமெரிக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ‘சாம்பியன் ஆஃப் கோல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
எங்களுடைய ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், தென்கொரியா, இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளோம். இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். முக்கியமாக நிலக்கரியை நாம் இப்போதும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தரமான நிலக்கரியை அமெரிக்கா வழங்குகிறது.
இந்தியாவுடன் நாம் மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய திருப்புமுனையாகும். இதன்மூலம் அமெரிக்காவின் எரிசக்தித் துறை புதிய இடத்தில் தடம் பதிக்கவுள்ளது. உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் அமெரிக்கா உருவாகி வருகிறது. அமெரிக்கா மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வழக்கம்போல உள்நாட்டுத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு அமெரிக்கா இனி செயல்படாது. சா்வதேச அளவில் அதிக பொருள்கள் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றாா்.
தொடர்புடையது

இந்தியா மீதான அமெரிக்க குற்றச்சாட்டின் விசாரணைக்குப் பிறகு இருதரப்பு ஒப்பந்தம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது? அமெரிக்க தூதா் தகவல்

பலவீனமான நிலையில் ஈரான் போா்நிறுத்தம்: ஈரான் பதிலை ஏற்காத டிரம்ப் கருத்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



