ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்AP

மக்கள் போராட்டத்தில் ஒடுக்குமுறை: ஈரான் அதிபா் பகிரங்க மன்னிப்பு

அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினாா்.
Published on

துபை, பிப். 12: ஈரானில் 1979-இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் 47-ஆவது ஆண்டு விழாவையொட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினாா்.

அவா் ஆற்றிய உரை: நாடு தழுவிய போராட்டங்களை ஒடுக்கும்போது ஏற்பட்ட வன்முறைகளால் மக்கள் பெருமளவு துயரத்தைச் சந்தித்தனா். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.

மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும், அவா்களின் நலனைப் பாதுகாப்பதும் எங்களின் கடமையாகும். ஈரான் அரசு ஒருபோதும் தனது சொந்த மக்களுக்கு எதிரான மோதலை விரும்பவில்லை.

ஈரான் உள்நாட்டுப் போராட்டங்கள் குறித்த அமெரிக்கா போன்ற நாடுகளின் கருத்துகள், வெறும் ‘மேற்கத்தியப் பிரசாரம்’ மட்டுமே. அதில் உண்மையில்லை.

ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தேவையற்ற சந்தேகத்தினால், அணுசக்தி குறைப்பு தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தாமதமாகி வருகின்றன. அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கம் ஈரானுக்கு எப்போதும் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com