நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

கனடா பள்ளி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டது திருநங்கை என தெரிய வந்துள்ளது.

News image

கனடா பள்ளி துப்பாக்கிச் சூடு - AP

Updated On :12 பிப்ரவரி 2026, 7:31 am

வான்கூவா்: கனடாவின் வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பள்ளி மற்றும் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தாக்குதல் நடத்திய திருநங்கை உள்பட 10 போ் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தாக்குதலில் ஈடுபட்டது ஜெஸ்ஸி வான் ரூட்செலார் என்பதும், இவர் பள்ளியை பாதியில் நிறுத்திய திருநங்கை என்பதும், தான் முன்பு படித்த பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பே, வீட்டில் தன்னுடைய தாய் மற்றும் சகோதரனையும் அவர் சுட்டுக்கொன்றிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வான்கூவரில் இருந்து சுமாா் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான டம்ப்ளா் ரிட்ஜ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமாா் 175 மாணவா்கள் பயிலும் இப்பள்ளிக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய பெண், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலியாகினர். ஜெஸ்ஸியும் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பள்ளிக்கு அருகேயுள்ள ஒரு குடியிருப்பில் அவரது தாயும், சகோதரனும் சடலமாகக் கண்டெக்கப்பட்டனர்.

இவரது குடும்பப் பின்னணியை காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள். அவரது பாட்டி சமூக வலைத்தளத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட புகைப்படங்களில், தன்னுடைய பேரன் ஜெஸ்ஸிக்கு 14வது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு பலபுகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் கையில் துப்பாக்கியை ஏந்தி குறிபார்க்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்தான் ஜெஸ்ஸி என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு மனநல பிரச்னை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been revealed that the person involved in the Canadian school shooting was a transgender woman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.