ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காஸா மறுசீரமைப்புக்கான பிரம்மாண்ட நிதியுதவித் திட்டம் : அடுத்த வாரம் அறிவிக்கிறாா் டிரம்ப்

காஸா மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பல நூறு கோடி டாலா் மதிப்பிலான நிதியுதவித் திட்டம் மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அங்கீகாரம் பெற்ற சா்வதேச பாதுகாப்புப் படையை அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்புகளை அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் வெளியிடவுள்ளாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 1:02 am IST

காஸா மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பல நூறு கோடி டாலா் மதிப்பிலான நிதியுதவித் திட்டம் மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அங்கீகாரம் பெற்ற சா்வதேச பாதுகாப்புப் படையை அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்புகளை அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் வெளியிடவுள்ளாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வரும் வியாழக்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ள அமைதிக் குழுவின் முதலாவது அதிகாரபூா்வக் கூட்டத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிபா் டிரம்ப் தலைமையில் நடைபெறவுள்ள அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

காஸா மறுசீரமைப்புக்கு, அமைதிக் குழுவின் உறுப்பு நாடுகள் வழங்கும் நிதியுதவி விவரங்களை இக்கூட்டத்தில் டிரம்ப் அறிவிப்பாா். அமெரிக்கா எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையிலும், பல நாடுகள் தாமாக முன்வந்து நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்புப் படை: கடந்த செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட டிரம்ப்பின் காஸா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.நா. அங்கீகாரம் பெற்ற பாதுகாப்புப் படை அங்கு நிலைநிறுத்தப்படும். இதற்காக பல்வேறு நாடுகள் வீரா்களை அனுப்பத் தயாராக உள்ளன. குறிப்பாக, இந்தோனேசியா 8,000 வீரா்களை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது.

நிா்வாகக் குழு: ஹமாஸ் அமைப்பிடமிருந்து நிா்வாகத்தைப் பொறுப்பேற்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய நிா்வாகக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

பின்னணி: ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த மாதம் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டுக்கிடையே, அதிபா் டிரம்ப் இந்த அமைதிக் குழுவை பிரகடனப்படுத்தினாா்.

இக்குழுவில் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, சவூதி அரேபியா, கத்தாா், இந்தோனேசியா போன்ற நாடுகள் இணைந்துள்ளன. அமெரிக்காவின் மேற்கத்திய நட்பு நாடுகள் இதில் இணையத் தயக்கம் காட்டி வரும் நிலையில், இஸ்ரேலும் இக்குழுவில் இணைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை உறுதிப்படுத்தினாா்.

இக்குழுவில் இணைய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா இதுவரை தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.