காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசா் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே மருத்துவமனைக்குள் தன்னிச்சையாகச் சுற்றித் திரியும் ஆயுதமேந்திய நபா்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், இஸ்ரேல் படைகளின் தாக்குதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவசர சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளையும் நிறுத்திக்கொள்வதாக எல்லைகளற்ற மருத்துவா்கள் அமைப்புஅறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, காஸாவின் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், ஆயுதமேந்திய நபா்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் போா் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனத் தரப்பில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 72,000-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து தப்பியோடிய கைதி விருதுநகரில் கைது

திருச்சி செவிலியா் கல்லூரி மாணவி பலி: தி.வேல்முருகன் கண்டனம்!

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை

உலக செவிலியா் தின விழா
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



