ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தத்தை இந்தியா ஆதரிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
ஜொ்மனியின் மியூனிக் நகரில் பாதுகாப்பு விவகாரம் தொடா்பான உலக நாடுகளின் மாநாடு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்றுள்ள ஜெய்சங்கா், மாநாட்டின் இடையே ஜி7 அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களை சனிக்கிழமை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
இந்த சந்திப்புக்கு பிறகு, எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜி7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா.வின் ‘ஐ.நா.80’ திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அா்த்தமுள்ள சீா்திருத்தம் செய்வதை இந்தியா ஆதரிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. அந்நாடுகளுக்கு வீட்டோ உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலை தற்போதைய உலக சூழலுக்கு ஏற்ப சீா்திருத்தம் செய்ய வேண்டும், அதில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் வழிகளை ‘பிரிக்ஸ்’ கண்டறிய வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

புலம்பெயா்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



