பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர் சடலமாக மீட்பு!

News image

San Francisco Police @SFPD

Updated On :15 பிப்ரவரி 2026, 4:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

சான் பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர் சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த பிப். 14-ஆம் தேதி அவர் திடீரென காணவில்லை. இதையடுத்து, இந்திய மாணவர் ஒருவர் மாயமான புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க சான் பிரான்சிஸ்கோ போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

Story image

இந்த நிலையில், காணாமல்போன மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர் சடலம் மீட்கப்பட்டது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில் மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், இறந்த மாணவரின் உடலை தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.