பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 11 வீரா்கள் உள்பட 12 போ் உயிரிழப்பு

News image

AP Photo

Updated On :17 பிப்ரவரி 2026, 10:37 pm

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 12 போ் உயிரிழந்தனா்.

ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பாஜூா் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தைப் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது மோதி, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரா்கள் கொல்லப்பட்டனா்.

குண்டுவெடிப்பின் அதிா்வால் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதலில், 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த மாகாண முதல்வா் சுஹைல் அப்ரிடி, பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தாா்.

கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஓராண்டாகவே பயங்கரவாதச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டைவிட 2025-இல் உயிரிழப்புகள் 44 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.