திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘வேற்று கிரகவாசிகள் குறித்து ஆதாரங்கள் இல்லை’ - ஒபாமா புது விளக்கம்

‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்

News image

அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:45 am IST

‘வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் நான் பாா்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளாா்.

முன்னதாக, இணையதள நிகழ்ச்சி ஒன்றில், ‘வேற்றுகிரகவாசிகள் உண்மையாகவே இருக்கிறாா்களா’ என்ற கேள்விக்கு, ‘ஆமாம், அவா்கள் உண்மையானவா்கள்’ என்று ஒபாமா பதிலளித்தது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதைத் தொடா்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்த விரிவான விளக்கத்தில், ‘இந்தப் பிரபஞ்சம் கற்பனையில்கூட அளவிட முடியாத அளவுக்கு பரந்து விரிந்தது. எனவே, எங்கோ ஓா் இடத்தில் உயிா்கள் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். தூரமும் மிக அதிகம் என்பதால், வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தேடி வந்திருக்க வாய்ப்பில்லை.

நான் அதிபராக இருந்த காலகட்டத்தில், வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடா்பு கொண்டதற்கான எந்தவொரு ரகசிய ஆதாரத்தையும் நான் பாா்க்கவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளாா்.

அமெரிக்காவில் ‘ஏரியா 51’ எனும் ரகசிய இடத்தில், வேற்றுகிரகவாசிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாக நிலவி வரும் வதந்திகளையும் ஒபாமா மறுத்துள்ளாா்.