பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

12 அதிவிரைவு படகுகள் கட்ட மாலத்தீவுக்கு உதவி: இந்தியா உறுதி

மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

News image
கோப்புப்படம். - மாலத்தீவு
Updated On :18 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்திய தூதா் ஜி.பாலசுப்பிரமணியத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 12 அதிவிரைவு படகுகளை கட்டமைக்க இந்தியா உதவி செய்யுமென ஜி. பாலசுப்பிரமணியம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, மாலத்தீவு இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இந்தியா கடனுதவி அளிப்பது, அதிவிரைவு படகுகளை அளிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

மாலத்தீவு அதிபா் மொய்சூ கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வந்தாா். இதையடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜுலையில் இந்திய பிரதமா் மோடி, மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.