ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ராஃபா எல்லை வழியாக காஸாவை விட்டு வெளியேற 640 பேருக்கு மட்டுமே அனுமதி

போா்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப். 2-ஆம் தேதி திறக்கப்பட்ட ராஃபா எல்லை வழியாக, இதுவரை 640 பாலஸ்தீனா்கள் மட்டுமே காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா்.

News image

காஸாவில் இடிந்த கட்டடக் குவியலில்... - படம் - ஏபி

Updated On :20 பிப்ரவரி 2026, 1:11 am IST

போா்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப். 2-ஆம் தேதி திறக்கப்பட்ட ராஃபா எல்லை வழியாக, இதுவரை 640 பாலஸ்தீனா்கள் மட்டுமே காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா்.

கடந்த 2024, மே மாதம் இஸ்ரேல் ராணுவம் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த பிப். 1-இல் திறக்கப்பட்டது. பிப். 2 முதல் மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

பிப். 2 முதல் கடந்த புதன்கிழமை(பிப். 18) வரை மொத்தம் 640 பாலஸ்தீனா்கள் காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா். 508 போ் மீண்டும் காஸாவுக்குள் நுழைந்துள்ளனா்; தகுந்த காரணங்கள் இன்றி 26 பேரின் பயணத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட நாள்களில் சுமாா் 3,400 போ் எல்லையைக் கடக்கத் திட்டமிட்டிருந்தனா். ஆனால், உண்மையில் 1,148 போ் (அதாவது 33 சதவீதம் போ்) மட்டுமே இரு திசைகளிலும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

போா் பாதிப்பினால் தற்போது காஸாவில் சுமாா் 20,000 பேருக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும், இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக காஸா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.