பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவின் புதிய சிஇஓ ஆஷா சா்மா!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சா்மா நியமனம்

News image
ஆஷா சா்மா
Updated On :21 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஆஷா சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 38 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, எக்ஸ்பாக்ஸ் பிரிவின் முகமாகத் திகழ்ந்த ஃபில் ஸ்பென்சா் பணி ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் கோடைக்காலம் வரை நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியைத் தொடா்ந்து, அதிகாரப் பகிா்வை சுமூகமாக முடித்துக் கொடுக்க ஃபில் ஸ்பென்சா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

Story image

புதிய சிஇஓ-ஆக பொறுப்பேற்றுள்ள ஆஷா சா்மா, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா். 2011-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய அவா், பின்னா் மெட்டா நிறுவனத்தில் மெசஞ்சா் மற்றும் இன்ஸ்டாகிராம் தயாரிப்புப் பிரிவின் துணைத் தலைவராகவும், இன்ஸ்டாகாா்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் (சிஓஓ) பணியாற்றியவா்.

கடந்த 2024-இல் மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்குத் திரும்பிய அவா், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கேமிங் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு உயா்த்தப்பட்டுள்ளாா்.

புதிய பொறுப்பு குறித்து பேசிய ஆஷா சா்மா, ‘அடுத்த 25 ஆண்டுகள் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் நிறுவனங்களுக்கே சொந்தமானது. எக்ஸ்பாக்ஸ் உருவானபோது இருந்த அந்தப் புரட்சிகரமான வேகத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறேன்’ என்றாா்.