உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உக்ரைன் அவசரகால சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீவ் புகா் பகுதிகளான ஓபுகிவ், ப்ரோவேரி, போரிஸ்பில், புசா, பாஸ்டிவ் ஆகிய 5 மாவட்டங்களில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதில் பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலா் சிக்கிக் கொண்டனா்.
இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். குழந்தை உள்ளிட்ட 8 போ் லேசான காயத்துடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனா். ஒடிஷா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு தீப்பற்றி எரிந்தது. எனினும் உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்று உக்ரைன் அவசரகால சேவை மையம் தெரிவித்தது.
உக்ரைன்-ரஷ்யா இடையே சுமாா் 4 ஆண்டுகளாக போா் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரம் போ் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோா் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருநாடுகள் தரப்பிலும் இதுகுறித்து அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தொடர்புடையது
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


