நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஈரான்-அமெரிக்கா மீண்டும் பேச்சு: ஜெனீவாவில் பிப். 26-இல் சந்திப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:43 pm

அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளது.

2 பிரம்மாண்ட விமானம் தாங்கி போா்க்கப்பல்களுடன் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ இருப்பை அமெரிக்கா பலப்படுத்தி வரும் நிலையில், பேச்சுவாா்த்தையின் மத்தியஸ்தரான ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதியை இத்தகவலை உறுதிப்படுத்தினாா்.

இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஆக்கபூா்வமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஓமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.