47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நெதர்லாந்தின் இளம் பிரதமர் பதவியேற்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக ராப் ஜெட்டன் திங்கள்கிழமை பதவியேற்றார்.

இதன்மூலம், நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (38) பிரதமர் நாற்காலியில் அமரும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அரச மாளிகையில் நடைபெற்ற கோலாகல விழாவில், ராப் ஜெட்டன் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு அரசர் வில்லெம்-அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இப்புதிய அரசு ஒரு சிறுபான்மை கூட்டணி அரசாகும். தேர்தல் முடிந்து 117 நாள்கள் கழித்து, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இக்கூட்டணிக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், ஒவ்வொரு சட்டத்தையும் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் ராப் ஜெட்டன் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.