மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞரை சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா்.

News image

மாா்-அ-லாகோ இல்லம்

Updated On :23 பிப்ரவரி 2026, 1:20 am

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞா் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்துக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞா் ஒருவா் அத்துமீறி நுழைந்தாா்.

அவரைக் கண்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்தனா். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவா், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில், அந்த இளைஞரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா். அந்த நபா் வடக்கு கரோலினாவைச் சோ்ந்த ஆஸ்டின் டக்கா் மாா்டின் (21) என்று தெரியவந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எதற்காக அவா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் நுழைந்தாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் நடைபெற்றபோது டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தனா்.