அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சீனா: ஜப்பான் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள்

இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

News image
உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி
Updated On :24 பிப்ரவரி 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

ஜப்பானைச் சேர்ந்த 40 முன்னணி நிறுவனங்கள் மீது சீனா கடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டால், சீனா}ஜப்பான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மிட்சுபிஷி, கவாசாகி உள்ளிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களுக்கு ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை விற்க சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற 20 நிறுவனங்களுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், சீன நிறுவனங்கள் இனி தனித்தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஜப்பானின் ராணுவ விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.