2025-இல் 7,667 புலம்பெயா் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா.
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7,667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர முயன்றவா்களில் 7,667 போ் உயிரிழந்ததோடு, பலா் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது.
சட்டப்பூா்வ புலம்பெயா்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனா். குறிப்பாக, மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
2024-இல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9,200-ஆக இருந்த நிலையில், 2025-இல் அது 7,667-ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், இது முன்னேற்றத்தினால் ஏற்பட்ட குறைவு அல்ல என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் மீட்புப் பணிகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முடங்கியதே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







