ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இவாடே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் ஸமியாகோ நகருக்கு அருகே கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஹொன்ஷு தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் லேசான அதிா்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும் இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ பொருள் சேதமே ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
புவி தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ’ பசிபிக் நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

