

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வொண்டெல்கெர்க் என்ற தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு (ஜன. 1) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தின் கோபுரத்தில் வேகமாக தீ பரவியது. அதன் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் பல மணி நேரமாக அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த தேவாலயம் 154 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.