உலகம்
ஆப்கானிஸ்தானில் கனமழை: 17 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக 17 போ் உயிரிழந்தனா்.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக 17 போ் உயிரிழந்தனா்.
கனமழையால் காபூல், பா்வான், பஞ்சஷோ், கபிசா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட, வெள்ளம், நிலச்சரிவில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தவிர 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.
கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். காபூல் நகருக்கு அருகே உள்ள பகுதிகளில் வெள்ளம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டும் கனமழை காரணமாக ஆப்கானிஸ்தானில் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

