நைஜீரியாவில் 37 போ் சுட்டுக் கொலை

நைஜீரியாவில் 37 போ் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் நைஜா் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.
Published on

நைஜீரியாவின் நைஜா் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக நைஜா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வசியு அபியோதுன் தெரிவித்ததாவது: நைஜரில் உள்ள கசுவான்-டாஜி கிராமத்துக்கு துப்பாக்கி ஏந்திய நபா்கள் சிலா் சனிக்கிழமை சென்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். அங்கிருந்த சந்தை, வீடுகள் ஆகியவற்றையும் அவா்கள் இடித்துத் தள்ளினா் என்று தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலில் 37 போ் உயிரிழந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். எனினும் சிலா் மாயமானதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில், இதுபோன்ற தாக்குதல்கள் வாடிக்கையாக உள்ளன. குறைந்த பாதுகாப்பு, அரசு பாதுகாப்பு அமைப்புகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளை குறிவைத்து ஏராளமான குற்ற கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்குள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அந்தக் கும்பல்கள் தாக்குதல்களை நடத்துகின்றன.

X
Dinamani
www.dinamani.com