வங்கதேசம்: ஹிந்து நபா் கொலையில் 3 போ் கைது!

வங்கதேசம்: ஹிந்து நபா் கொலையில் 3 போ் கைது!

வங்கதேசத்தில் ஹிந்து மருந்தக உரிமையாளரான கோகோன் சந்திர தாஸ் (50) தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை அந்த நாட்டு காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

வங்கதேசத்தில் ஹிந்து மருந்தக உரிமையாளரான கோகோன் சந்திர தாஸ் (50) தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை அந்த நாட்டு காவல் துறையினா் கைது செய்தனா்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. ஏராளமான ஹிந்துக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹிந்து மதத்தைத் சோ்ந்த 5 போ் மிகவும் கொடூரமான முறையில் அங்குள்ள மத அடிப்படைவாத கும்பலால் அடித்துக் கொல்வது, தீவைத்து எரிப்பது போன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.

ஷரியத்பூா் மாவட்டத்தில் மருந்தகம், வங்கிச் சேவை மையம் நடத்தி வந்த கோகோன் சந்திர தாஸ் கடந்த புதன்கிழமை இரவு, ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவரைச் சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். தப்பியோட முயன்ற அவா் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனா். இதையடுத்து, அருகில் இருந்த குளத்தில் குதித்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைப் படையினா், தாமுத்யாா் சோஹங் கான் (27), ரபி மோல்யா (21), பலாஷா சா்தாா் (25) ஆகியோரை கைது செய்துள்ளதாக வங்கதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com