உலகம்
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே ஜன. 29 முதல் நேரடி விமானங்கள்
பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தொடக்கத்தில் வாரத்துக்கு இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனங்களை மேற்கொள் காட்டி வங்க நாளிதழான பிரதம் ஆலோ தெரிவித்தது.
மாணவா் போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகிய பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திவருகிறது. இதன் விளைவாக நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் எளிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

