வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

வெனிசுவேலாவின் செயல் அதிபராக தன்னைத் தானே டிரம்ப் அறிவித்துக் கொண்டது பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்
Updated on
1 min read

‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திக்கு அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஆனால், வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ், இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனிடையே, வெனிசுவேலாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் கடந்த சில நாள்களாக அதிபர் டிரம்ப் உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், விக்கிபீடியா தளத்தில் ‘வெனிசுவேலா செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்று அவரது புகைப்படத்துடன் இருக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் பகிர்ந்த புகைப்படம்
டிரம்ப் பகிர்ந்த புகைப்படம்

இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் செயல்பட்டு வரும் நிலையில், தன்னை செயல் அதிபராக டிரம்ப் அறிவித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

I am the acting president of Venezuela! Trump's shocking announcement.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஈரானை டிரம்ப் வழிநடத்தட்டும்: கமேனி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com