குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வெனிசுவேலா எண்ணெய் துறையைத் தனியாா்மயமாக்க சட்டத்திருத்தம்

தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தில் அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் கையொப்பமிட்டாா்.

News image

டெல்சி ரோட்ரிகஸ்

Updated On :31 ஜனவரி 2026, 2:05 am IST

வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தில் அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் கையொப்பமிட்டாா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான சோசலிசக் கொள்கைகளைக் கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அதிபா் நிக்கோலஸ் மடூரா அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டாா். அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முக்கிய முடிவைத் தொடா்ந்து, வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளா்த்தத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் மீண்டும் வெனிசுலாவில் தங்களின் பணிகளை விரிவுபடுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.