

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தாமதமாவது ஏன்? என்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துப் பேசியுள்ளார்.
உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டு வரும் டிரம்ப், இவ்விவகரம் குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன்(2-ஆம் முறை அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபின்). ஆனால், உக்ரைன் - ரஷியா இடையேயான சண்டை மட்டும், அவ்விஷயத்தில் கடினமான ஒன்றாக இருக்கிறது.
இதற்கான காரணம் என்னவெனில், மேற்குறிப்பிட்ட இருநாடுகளின் அதிபர்களும், வோலோதிமீர் ஸெலென்ஸ்கியும் விளாதிமீர் புதினும், ஒருவரையொருவர் வெறுக்கின்றனர். எனினும், சண்டை நிறுத்தத்தில் உடன்படிக்கை ஏற்படுவதை நோக்கி, மிக நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்.
உக்ரைன்-ரஷியா போரில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவன(சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவிக்கிறது. ரஷிய தரப்பில் மட்டும் இதுவரை சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வல்லரசு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பாக ரஷியாவின் இழப்புகள் கருதப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.