வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “அவசர எச்சரிக்கை. வடகொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி அவரசநிலை பிரகடனத்தை செயல்படுத்தி ஏவுகணையின் பாதையைத் தீர்மானிக்க உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனை ஜப்பானில் பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியதாக ஜப்பான் கடற்படை தெரிவித்த நிலையில், கடலுக்குச் சென்ற கப்பல்களை அவசரமாகக் கரைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது,
ஏவுகணை சென்ற பாதையைக் கணக்கிடுகையில் ஜப்பான் பிரதேசத்திற்கு உடனடி ஆபத்து எதுமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார எல்லைக்கு வெளியே கடலில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணையின் தாக்கத்தை மதிப்பிட்ட ஜப்பானிய அதிகாரிகள் இதுவரை எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
தென் கொரியாவும் இந்த ஏவுகணைச் சோதனையை கண்காணித்த நிலையில் வடகொரியா கிழக்கு நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து ஆண்டுதோறும் நிகழ்த்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை தற்போது நடத்திவருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றமான சூழலை உருவாக்கிய நிலையில் இந்த ஏவுகணைச் சோதனை நடைபெற்றுள்ளது.
ஜப்பான் அரசு இதுதொடர்பாக பிரதமரின் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவசரக்குழு கூட்டத்தை நடத்திவருகிறது.
மேலும், இந்த சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியா மேற்கொண்ட இராணுவச் சோதனைகளின் ஒரே மாதிரியான முறையில் நடப்பதாக ஜப்பான் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, வட கொரியா கடந்த ஜனவரி 27 அன்று ஜப்பான் கடல்பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவை இதேபோல ஜப்பானின் சிறப்பு பொருளாதார எல்லைக்கு வெளியே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Japan activates crisis team as North Korea launches suspected ballistic missile
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை: வடகொரியா சோதனை!

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை... வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


