தென் கொரியாவில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கான போட்டியை அரசு நடத்தியுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகளில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் நாடாக தென் கொரியா இருந்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்படும் மனச்சோர்வு, தூக்கமின்மை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சியோல் பெருநகர அரசு ஓய்வைக் கொண்டாடும் நோக்கத்தில் ஒரு பொது நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.
இதன்படி, நன்றாக ஆழ்ந்து குட்டித் தூக்கம் போடும் நபர்களுக்கென போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வு 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தாண்டுக்கானப் போட்டி சியோல் நகரின் ஹன்காங் ஆற்றின் கரையில் உள்ள யூடோ ஹன்காங் பூங்காவில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள குறிப்பிடத்தக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றது. இதில், பங்கேற்க விண்ணப்பிக்கும் நபர்களிடம் “உங்களுக்கு ஏன் குட்டித் தூக்கம் தேவைப்படுகிறது?” என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அவர்கள் தெரிவிக்கும் பதிலின் மூலம் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன்படி, இந்தாண்டு போட்டியில் 170 பேர் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு கண்களை வெறுமனே மூடுவது மட்டும் போதாது. இதில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயத் துடிப்பைக் கணக்கிடும் கருவிகள் வழங்கப்படும்.
அதன்மூலம், இதயத் துடிப்பு எந்த அளவிற்கு குறைந்து சீராக இருக்கிறது எனக் கணக்கிட்டு, குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூங்குபவருக்கு அதற்கான மதிப்பெண் வழங்கப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தூக்கத்தைக் கலைக்க கொசு பறப்பதைப் போன்ற சத்தம், இறகுகளால் வருடுவது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவ்வப்போது இடையூறுகளை ஏற்படுத்துவார்கள்.
இதில், வெற்றி பெறுபவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 32,000 (இந்திய மதிப்பில்) மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்படும்.
இன்று நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில் 80 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக, 37 வயதான அலுவலகப் பணிசெய்யும் நபர் ஒருவர் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
Summary
South Korea Held a Competition for Nappers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆழ்ந்த தூக்கத்துக்கு என்ன மருந்து?

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

வயதானாலும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த 6 விஷயங்களைக் கடைப்பிடியுங்கள்!

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


