நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

News image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 5:23 am IST

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தனியாக சிறப்புத் தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இச்சிறப்பு தீா்ப்பாயம் வழக்கமான நடைமுறைகளைத் தவிா்த்து, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் மரண தண்டனை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், விசாரணைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அதேநேரம், இந்நடவடிக்கையில் குற்றவாளிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படாமல், நீதித்துறை நெறிமுறைகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஹமாஸ் 2023, அக். 7-இல் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா்; 251 போ் பிணைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனா். இதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 72,000-க்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.