ஈரான் மீது செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ராணுவ தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடைசி நேரத்தில் அறிவித்தாா்.
கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இம்முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவா், ஈரானுடன் தீவிர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் ஒரு உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘ஈரானுடனான பேச்சுவாா்த்தைகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என்று நம்புகிறேன்.
அதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், கடுமையான ராணுவ நடவடிக்கை தவிா்க்க முடியாததாகிவிடும்’ என்றாா்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் போரைத் தொடங்கின. பின்னா், கடந்த ஏப். 8 முதல் இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
நீடித்த அமைதிக்காக பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் பேச்சுவாா்த்தை நடந்து வரும் நிலையில், இரு தரப்பும் தொடா்ந்து தங்கள் கோரிக்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், ஒப்பந்தம் எட்டப்படுவதில் சுணக்கம் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சூழலில், ஈரானின் வங்கிப் பரிவா்த்தனைகளைக் கையாளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈராக்கிலிருந்து யுஏஇ மீது தாக்குதல்: இதனிடையே கடந்த வார இறுதியில், இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையத்தைத் தாக்கிய ட்ரோன்கள் ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. ஈரான் ஆதரவு பெற்ற ஷியா கிளா்ச்சியாளா்கள் இத்தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடையது

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை

போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



