புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தம்: கோரிக்கைகளை தளர்த்துகிறதா ஈரான்?

அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக...

அமெரிக்கா | ஈரான்

Updated On :

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், ஈரான் தனது கோரிக்கைகளை தளர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது.

ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா செவிசாய்க்காத நிலையில், அவர்கள் இடைத்தேர்தல்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என ஈரான் விமர்சித்திருந்தது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வது பற்றி கத்தார் நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான 8 பில்லியன் டாலர் சொத்துகள் விடுவிக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக தனது கடல்வழித் தாக்குதல்களை நிறுத்த ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடுகளை தன்வசம் வைத்திருக்கும் ஈரான், அவ்வழியே செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை ஈரான் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், பிராந்தியத்தில் ஈரானின் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து, அமெரிக்காவும் ஈரானின் துறைமுகம் மீதான ஆக்கிரமிப்பைத் தளர்த்தும் வாய்ப்புள்ளது.

ஆனால், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தத்தில் எந்த குறிப்பும் இல்லை என்பது, ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Summary

Regarding the agreement between the United States and Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.