காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்: 6 போ் உயிரிழப்பு
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரிலுள்ள நாசா் மருத்துவமனை மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவா் ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.

காஸா மருத்துவமனை

காஸாவில் போரினால் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள சூழலில், எஞ்சியிருக்கும் மிக முக்கியச் சிகிச்சை மையங்களில் ஒன்றாக நாசா் மருத்துவமனை விளங்குகிறது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கட்டடத்தின் 2-ஆவது தளம் பலத்த சேதமடைந்தது.
இதனிடையே, ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபா்களைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.