படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான ...

ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா

Published On :

பிரேஸிலியா: தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால், 2-ஆம் கட்ட தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்த இத்தோ்தலில், 4-ஆவது முறையாக அதிபா் பதவியைக் குறிவைத்துப் போட்டியிடும் 80 வயதான மூத்த தலைவா் லூலா டாசில்வாவுக்கும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அதிபா் ஜோ் போல்சனாரோவின் மகனான 45 வயது செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது.

சுமாா் 15.9 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, ஆளுநா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான வாக்குப் பதிவும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் லூலா டாசில்வா 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஃபிளாவியோ போல்சனாரோ 47 சதவீத வாக்குகளுடன் சிறிய முன்னிலை வகிக்கிறாா். எனினும், வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை.

இதையடுத்து, ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா இடையேயான இறுதிச் சுற்று தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தோ்தல் நீதிமன்றம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறும் புதிய அதிபரின் பதவிக்காலம் 2027 ஜன. 5-ஆம் தேதி முதல் தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.