இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சௌதி உச்ச நீதிமன்றம்!
சௌதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

சௌதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியைச் சேர்ந்தவர் சிவராசா. இவர் வேலைக்காக 2025 செப். 4-ஆம் தேதி செளதி அரேபியாவுக்குச் சென்றார்.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி, முகநூலில் அனோஜன் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பதிவிட்டதாகவும், இது மத மாற்றம் என்றும் குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் அல்-அஹ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. 27 வயதான அனோஜனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அனோஜனுக்கு ஆதரவாக பலரும் சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், சௌதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி நல்ல உறவுகளை வைத்துள்ளதால், அவருக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த எம்பி மனோ கணேசனும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் சௌதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
Summary
Saudi Arabia's Supreme Court has set aside the death sentence handed to a Sri Lankan migrant worker over a comment he made on Facebook, Colombo's Deputy Foreign Minister Arun Hemachandra said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

