ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மீண்டும் தாக்குதல்: டிரம்ப்புக்கு சவால் விடுக்கும் ஸெலென்ஸ்கி!
ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையே எரிசக்தி போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை, ரஷியா உறுதிப்படுத்தாத நிலையில் ரஷியா இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் தாக்குதல்கள் கடுமையாக்கப்படும் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப்பின் பதிவுக்குப் பின்னர் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸெலென்ஸ்கி, எரிசக்தி போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் முடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது. டிரம்ப்பின் கருத்துகளை மீறி இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2022 முதல் உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பைத் தொடங்கியது முதலே, உக்ரைனின் மின்சார உள்கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது, அதேபோல, ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட பல ரஷிய கட்டமைப்புகளை தாக்கி கடுமையான பதிலடியை உக்ரைன் கொடுத்துள்ளது.
இரு நாடுகளும் எரிசக்தி போர்நிறுத்தம் செய்து தாக்குதல்களை நிறுத்துமாறு கூறிய டிரம்ப், தற்போதைய தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற பின்னர் ஸெலென்ஸ்கியுடன் தீவிர மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர், உக்ரைனுக்கான உளவுத்துறை ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், உக்ரைன் அரசு டிரம்ப்பின் மாறிவரும் கருத்துகளுக்கு ஏற்ப தனது உறவைச் சீராக்க முயன்று வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தனது பேட்டியில், “டிரம்ப் புதின் போன்ற மனிதர்களை தான் நேசிக்கிறார். அவர்களை மதித்து வெளிப்படையாகப் பேசுகிறார். அவரைப் பொறுத்தவரை 30, 40 ஆண்டுகள் தலைவர்களாக இருந்தவர்களே வலிமையானவர்களாக இருக்க முடியும் என்று அர்த்தம்” எனப் பேசினார்.
Summary
Renewed attacks on Russian oil refineries: Zelenskyy challenges Trump!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


