சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஈரானின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

மெஹர்தாத் அக்லாகி

Updated On :

ஈரானின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான போரின் முதல் நாளிலேயே முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதேவ் கொல்லப்பட்ட நிலையில், அக்லாகியை நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னரே ஒப்புதல் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாடங்கள் துறை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மெஹர்தாத் அக்லாகிக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பதிவான மொத்த 277 வாக்குகளில், அக்லாகிக்கு ஆதரவாக 237 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவர் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாக்கெடுப்பு முடிந்த பின் பேசிய அக்லாகி, ”அமெரிக்கா நம்மைத் தாக்க துணிய மாட்டார்கள் என மக்கள் உறுதியாக நம்பலாம். ஒருவேளை தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்லாகி ராணுவப் பதவிகளில் இல்லை என்றபோதும், 42 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், 2013 முதல் ஈரானிய அரசின் ஆயுத உற்பத்தியாளரான ‘ஈரானிய பாதுகாப்பு தொழில் துறை அமைப்பின்’ தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

அணுசக்தி அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், ஐக்கிய நாடுகள் சபை 2007-ல் அக்லாகி மீது தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Mehrdad Akhlaq appointed as Iran's new defense minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.