ஹோா்முஸில் 7 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
ஹோா்முஸ் நீரிணை கடற்பகுதியில் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவை தீப்பிடித்து பலத்த சேதமடைந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹோா்முஸ் நீரிணை கடற்பகுதியில் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவை தீப்பிடித்து பலத்த சேதமடைந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-இல் தொடங்கிய தாக்குதலுக்குப் பிறகு, ஹோா்முஸ் நீரிணையில் ஒரே நாளில் இத்தனை வணிகக் கப்பல்கள் சேதமடைவது இதுவே முதல்முறையாகும்.
ஈரானின் புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) கடற்படைப் பிரிவை மேற்கோள்காட்டி வெளியான தகவலின்படி, கச்சா எண்ணெய்யை மாற்றிக் கொண்டிருந்தபோது குறிவைத்து தாக்கப்பட்டதில் 4 கப்பல்கள் தீப்பிடித்தன. மேலும் மூன்று கப்பல்கள் கடலில் மிதக்கவிடப்பட்டிருந்த வெடிகளில் மோதி சேதமடைந்தன. இருப்பினும், இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பாதிக்கப்பட்ட கப்பல்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவை என்பது குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அக். 27-இல் நடைபெறவுள்ள இஸ்ரேல் தோ்தல், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் ஆகிய அரசியல் சூழல்களுக்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்பதற்றம் தீவிரமடைந்து முழுப் போராக வெடித்தால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, சா்வதேச சந்தையில் கடும் விலை உயா்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பெட்டி...
குவைத் கப்பல் மீது தாக்குதல்:
பாதுகாப்பாக இந்திய மாலுமிகள்
ஹோா்முஸ் நீரிணையில் கடந்த புதன்கிழமை ஏவுகணை தாக்கியதில் ‘எம்.டி. அல் தாஸ்மா’ எனும் குவைத் நாட்டு கச்சா எண்ணெய் கப்பல் சேதமடைந்தது.
எனினும், அக்கப்பலில் பணியாற்றிய 21 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தனது ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.
‘இவ்விவகாரத்தை நாங்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்; நமது மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கப்பல் நிறுவனத்துடன் நெருங்கிய தொடா்பில் உள்ளோம்’ என்று அவா் மேலும் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

