பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றி
பிரேஸில் அதிபர் தேர்தலில் லூலா டாசில்வா மீண்டும் வெற்றி பெற்றிருப்பது பற்றி...

லூலா டாசில்வா
பிரேஸில் அதிபர் தேர்தலில் லூலா டாசில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேஸில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபரான லூலா டாசில்வா (80) 51.21% வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபா் ஜெய்ா் போல்சனாரோவின் மகன் செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோ(45) 48.79% வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து, பிரேஸிலின் அதிபராக லூலா டாசில்வா 4ஆவது முறையாக பொறுப்பேற்கவுள்ளார். லூலாவின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ, சாவ்பாவ்லோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த அக். 4ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில், அதிபர் வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அதில் ஃபிளாவியோ போல்சனாரோ முதலிடமும், லூலா டாசில்வா இரண்டாமிடமும் பெற்றனர்.
இதையடுத்து, முதல் இரண்டு இடங்களைப் பிடித்த லூலா டா சில்வா - ஃபிளாவியோ போல்சனாரோ இடையேயான இறுதிச் சுற்றுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், லூலா டாசில்வா அதில் வெற்றி பெற்றுள்ளார். பிரேஸில் தேர்தல் வரலாற்றில் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து, இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று அதிபரான முதல் வேட்பாளர் லூலாடா சில்வா ஆவார்.
லூலாடா சில்வா ஏற்கெனவே 2003, 2006, 2022 ஆகிய ஆண்டுகளில் பிரேஸில் அதிபராகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Lula's reelection for an unprecedented fourth term extends a political career spanning more than four decades and delivers a humiliating blow to the movement built by former President Jair Bolsonaro
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


