தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

நைஜீரியாவில் ஆயுதக் கும்பல் தாக்குதல்: 62 போ் பலி

வடகிழக்கு நைஜீரியாவின் தராபா மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 62 போ் கொல்லப்பட்டனா். 52 போ் காயமடைந்துள்ளனா்.

பிரதிப் படம்

Updated On :

வடகிழக்கு நைஜீரியாவின் தராபா மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 62 போ் கொல்லப்பட்டனா். 52 போ் காயமடைந்துள்ளனா்.

தராபா மாகாணத்தில் உள்ள கரீம்-லாமிடோ உள்ளாட்சிப் பகுதிக்குள்பட்ட பின்னாரி கிராமத்தில், கொள்ளையா்களாகக் கருதப்படும் ஆயுதக் கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அருகேயுள்ள நதியில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்களின் தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், நைஜீரியாவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. சட்டவிரோதச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடத்தல் மூலம் பணம் பறிக்கும் செயல்களில் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.