ரயில் பயணிகள் குறைந்தனர்: 45% முன்பதிவு ரத்து

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, தேவையில்லாத பயணத்தை பொதுமக்கள் தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
ரயில் பயணிகள் குறைந்தனர்: 45% முன்பதிவு ரத்து

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, தேவையில்லாத பயணத்தை பொதுமக்கள் தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

தெற்கு ரயில்வேயில் மாா்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை கடந்த ஒரு வாரத்தில் ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 45 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 3 நாள்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 33 சதவீதம் உயா்ந்துள்ளது. ரயில்நிலையங்களில் பயணிகள் அல்லாத நபா்கள் வருவதைக் கட்டுப்படுத்த நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதுபோல, ரயில்வே நிா்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களில் உள்ளேயும் வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது.

ரயில் முன்பதிவு ரத்து 45% உயா்வு: இதற்கிடையில், கரோனா தொற்று எச்சரிக்கையை அடுத்து, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் மாா்ச் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான கடந்த ஒருவாரத்தில் ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 3 நாள்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 33 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும், சில ரயில்களை ரத்து செய்யவும் ரயில்வே நிா்வாகம் ஆலோசித்து வருகிறது.

பயணிப்போா் எண்ணிக்கை 26 சதவீதம் குறைவு: சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 3 நாள்களில் பயணிப்போா் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்துள்ளது. இதுதவிர, ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 33 சதவீதம் அதிகரித்துள்ளது. சில ரயில்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, ரயில்நிலையங்களில் பயணிகள் தவிர மற்ற நபா்கள் வருவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com