விருதுகள் 2023

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.  
விருதுகள் 2023


ஜனவரி

26: தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.  

மார்ச்

8:: எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு "ஒளவையார் விருதை' முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மின்தூக்கியில் (லிஃப்ட்) நிகழும் விபத்துகளைத் தடுக்கும் கருவியை உருவாக்கிய ப்ளஸ்-1 மாணவி இளந்திரைக்கு "சிறந்த மாணவர் விருது' வழங்கப்பட்டது. 
13: "ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.  

ஜூன்

5:: உயிர்க்கோள பாதுகாப்பு மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநரும் ராமநாதபுரம் மாவட்ட வனஅதிகாரியுமான பகன் ஜகதீஷ் சுதாகருக்கு யுனெஸ்கோவின் "மைக்கேல் பாடிஸ்úஸ விருது' வழங்கப்பட்டது. 
22:: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் கே.சுகந்தி உள்பட 30 பேருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2023-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 

ஜூலை

14:: பிரெஞ்சு மொழியைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியை நளினி ஜெ.தம்பிக்கு  "செவாலியர் விருதை' பிரெஞ்சு அரசு வழங்கியது. 
செப்டம்பர்
23:: தில்லியில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஆர்ஆர்ஐ) வேளாண் விஞ்ஞானி சுவாதி நாயக்குக்கு நார்மன் இ.போர்லாக் விருது வழங்கப்பட்டது. இவர் இந்த விருதைப் பெறும் 3-ஆவது இந்தியராவார். 
26:: இந்திய திரைப்படத் துறையில் உயரிய விருதான 2021-ஆம் ஆண்டுக்கான "தாதா சாகேப் பால்கே விருது' நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது.

அக்டோபர்

6:: ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
9:: தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு, பணியிடத்தில் பாலின இடைவெளி, ஊதிய முரண்பாடு ஆகியவை தொடர்பான புரிதல்களை மேம்படுத்தும் ஆய்வுகளுக்காக க்ளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com