கோகுலாஷ்டமி: கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோகுலாஷ்டமி பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோகுலாஷ்டமி பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 தருமபுரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், அப்பாவு நகர் மீனாட்சி நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், காலை 5 மணிக்கு, துளசி பூஜை, சந்தியா ஆரத்தியுடன் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 இதைத் தொடர்ந்து, மதியம் ஒரு மணி வரை தரிசனம் நடைபெற்றது. இரவு 7 மணி முதல் பக்தி கீர்த்தனைகள் பாடப்பட்டு அபிஷேக பூஜை நடைபெற்றது. மேலும், ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி வழங்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
 இதேபோல, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 ஒசூரில்...
 ஒசூர்-ராயக்கோட்டை சாலையில் கோகுல் நகர் அருகில் உள்ள அருள்மிகு ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு சாற்றுமுறை மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 விழாவை முன்னிட்டு, வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், ரயில் நிலைய சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ஜெகந்நாதர் உற்வசமூர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 ஒசூர் வட்டாட்சியர் சாலையில் உள்ள வேணுகோபால் சுவாமி, ஆஞ்சநேயர் கோயில், பாகலூர் கிருஷ்ணர் கோயில், கல்யாண வெங்கடேஸ்வரர், பாண்டுரங்கன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. ஒசூர் அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 கிருஷ்ணகிரியில்...
 பழையபேட்டையில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி கோயில், மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா வந்தார்.
 இதே போல, கிருஷ்ணகிரி தர்மராஜா கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழையபேட்டையில் உள்ள நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com