கொந்தகைப் பெருமாள் கோயிலில் ஜன.8 -இல் பரமபதவாசல் திறப்பு

கொந்தகை பெருமாள் திருக்கோயிலில் ஜனவரி 8-ஆம் தேதி காலையில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொந்தகை பெருமாள் திருக்கோயிலில் ஜனவரி 8-ஆம் தேதி காலையில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவாய்மொழியை விரிவாக கூறிய திருமலையாழ்வார் அவதரித்த தலம் சிவகங்கை மாவட்டம் கொந்தகை. இவரிடம் மணவாளமாமுனிகள் கல்வி கற்றார்.
கொந்தகையில் உள்ள அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயிலில் ஜனவரி 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சொர்க்கவாசல் திறப்பைத் தொடர்ந்து திருமஞ்சனம், திருவாராதனம் மற்றும் தீபாராதனை மற்றும் தீர்த்தக் கோஷ்டி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அருள்மிகு பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
 பக்தர்கள் பெருமாளைத் தரிசிக்கும் வகையில் ஜனவரி 8 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com