வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் இன்று சுவாமி, அம்மன் அருள்பாலிப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில் நான்காம் திருநாளான திங்கள்கிழமை (மே 1) வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் அருள்பாலிக்கின்றனர்.
வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் இன்று சுவாமி, அம்மன் அருள்பாலிப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில் நான்காம் திருநாளான திங்கள்கிழமை (மே 1) வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் அருள்பாலிக்கின்றனர்.
திருக்கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் அருள்மிகு சுந்தரேசுவரர் பிரியாவிடை மற்றும் அம்மன் காலையில் புறப்பாடாகின்றனர். கிழக்கு சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி, மறவர்சாவடி, சின்னக்கடை வீதி, தெற்குவாசல் வழியாக காலை 10 மணிக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருள்கின்றனர். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பாவக்காய் மண்டகப்படியில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி தெற்குவாசல் வழியாக சின்னக்கடை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி வழியாக மீண்டும் இரவு 9.30 மணிக்கு திருக்கோயிலை வந்தடைகின்றனர்.
ஐந்தாம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடாகி வடக்குமாசி வீதி ராமாயணச் சாவடியில் எழுந்தருள்கின்றனர். மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயில் வந்தடைந்ததும், மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர் பறிலீலை நடைபெறுகிறது. மூன்றாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுவாமி பிரியாவிடையுடன் கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com