எள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காரைக்காலில் பரவலான பகுதியில் கோடைகாலப் பயிரான எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
எள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காரைக்காலில் பரவலான பகுதியில் கோடைகாலப் பயிரான எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
 காரைக்கால் பகுதியில் பொதுவாக நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், கோடைகாலப் பயிர் வகைகள் சாகுபடியில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. சம்பா பருவ நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து, பயறு, பருத்தி ஆகியவற்றை விதைக்கின்றனர்.
 கடந்த 2, 3 ஆண்டுகளாக காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக எள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நிகழாண்டு கூடுதலான நிலப்பரப்பில் எள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
 தற்போது காரைக்கால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக கோட்டுச்சேரிக்கு கிழக்கே சுமார் 500 ஹெக்டேரில் எள் பயிரிட்டுள்ளனர். இதுகுறித்து  கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த எள் சாகுபடியாளர் முருகையன் கூறியது:  எள் 90 நாள் பயிர். கடற்கரைப் பகுதியில் ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்கிறேன். இந்த பிராந்தியத்தில் பெரும்பாலான விவசாயிகள் தலா ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்கின்றனர். பலர், உளுந்து பயிரிட்டுள்ளனர்.
 ஒரு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை போதுமானது. ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் 100 கிலோ ரூ.6 ஆயிரம் விலையில் எள் கொள்முதல் செய்யப்படுகிறது.   பயிர் தொடக்க காலத்தில் தரப்படும் தண்ணீர் போதுமானது. கடந்த 4-ஆம் தேதி காரைக்காலில் பெய்த மழை எள் சாகுபடிக்கு ஏற்புடையதாகிவிட்டது. கோடை வெயிலில் இது நல்ல மகசூலை தரும். இங்கு அறுவடை செய்யும் எள், காரைக்காலில் உள்ள எண்ணெய் ஆலைக்கு விற்பனை செய்துவிடுவோம்.  எள் போன்ற கோடைகாலப் பயிர்களை வரும் ஆண்டிலிருந்து கூடுதலாக பயிரிட  திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com