பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
வேதாரண்யம் வட்டாரத்திலுள்ள பள்ளிகளில் மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக உள்ள 285 பேருக்கு இப்பயிற்சி நடைபெறுகிறது.
பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடைபெறும் இந்த முகாம், வேதாரண்யம் வட்டார வள மைய அலுவலகம், ஆயக்காரன்புலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கருப்பம்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தகட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செண்பகராயநல்லூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் நடத்தப்படுகிறது.
முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய உட்கூறுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியப் பணிகள், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், பெண் உரிமைகள், பள்ளி மேலாண்மைத் திட்டம், பள்ளி முழு வளர்ச்சித் திட்டம், பேரிடர் மேலாண்மை, உடல் நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து கருத்தாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேதாரண்யம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பெனடிக்ட் சேவியர் தொடங்கி வைத்தார்.
இதில் வேதாரண்யம் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி,
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com